சென்னை, மே 22 – புதிய ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்துள்ளார். புதிய அமைச்சர் பட்டியலை அளிக்குமாறும் ஜெயலலிதாவிற்கு ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழக முதலமைச்சர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். ஆளுநர் மாளிகையில் ரோசய்யாவிடம் ஓ. பன்னீர் செல்வம் ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
பன்னீர் செல்வம் ராஜினாமா செய்த பின், மீண்டும் போயஸ் கார்டன் வந்தடைந்தார். அதிமுக சட்டமன்றத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதாவுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒருமனதாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் வெறும் 10 நிமிடங்களில் நிறைவடைந்தது. பன்னீர் செல்வம் உள்பட 5 அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்தனர்.
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுத்த முடிவு பற்றி ஜெயலலிதாவிடம் பன்னீர் செல்வம் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், புதிய ஆட்சி அமைக்க ஜெயலலிதாவுக்கு ஆளுநர் ரோசய்யா அழைப்பு விடுத்துள்ளார்.