Home இந்தியா தமிழக ஆளுநர் ரோசய்யாவுடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு!

தமிழக ஆளுநர் ரோசய்யாவுடன் ஜெயலலிதா திடீர் சந்திப்பு!

531
0
SHARE
Ad

jayalalitha,roshayaசென்னை, ஜூன் 7 – தமிழக ஆளுநர் ரோசய்யாவை, கிண்டி ஆளநர் மாளிகைக்கு நேரடியாக சென்று முதல்வர் ஜெயலலிதா வெள்ளிக்கிழமை திடீரென சந்தித்து பேசினார். இதனால் அமைச்சர்கள் இடையே திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகம் வந்தார். அங்கு, அவரை ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் ஸ்பிக் நிறுவன தலைவர் ஏ.சி.முத்தையா குடும்பத்தினருடன் சந்தித்து பேசினார்.

அதைத்தொடர்ந்து, குறுவை நெல் சாகுபடி தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, தலைமை செயலகத்தில் இருந்து நேராக கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சென்று தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து பேசினார்.

#TamilSchoolmychoice

முதல்வர் ஜெயலலிதா திடீரென கவர்னர் மாளிகை சென்று ஆளுநரை சந்தித்து பேசியது அமைச்சர்கள் இடையே திடீர் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர்கள் பட்டியலில் எந்நேரமும் மாற்றம் வரலாம் என்ற பதற்றம் அனைத்து அமைச்சர்களையும் தொற்றிக் கொண்டது.

இது குறித்துதான் சென்னை தலைமை செயலகம் முழுவதும் ஒரே பேச்சாக இருந்தது. அதே நேரம், தற்போது மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவியேற்றுள்ளது.

இதனால் காங்கிரஸ் ஆட்சியில் நியமிக்கப்பட்ட தமிழகம் உட்பட சில ஆளுநர்கள் விடுவிக்கப்பட்டு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்ற பேச்சும் உள்ளது. அதன்படி, ஆளுநர் மாற்றம் செய்யப்பட உள்ளதால் மரியாதை நிமித்தமாக ஜெயலலிதா நேரில் சந்தித்து பேசியதாக தலைமை செயலக வட்டாரத்தில் கூறப்பட்டது.

புதிதாக பதவியேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியை ஜெயலலிதா கடந்த 3-ஆம் தேதி டில்லி சென்று சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து இருவரும் பேசினர். இது குறித்தும், நேற்றைய சந்திப்பின்போது தமிழக ஆளுநர் ரோசய்யாவிடம் ஜெயலலிதா பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழக அரசு நேற்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வர் ஆளுநரை அவ்வப்போது மரியாதை நிமித்தம் சந்தித்து தமிழகத்தின் சட்டம்  ஒழுங்கு நிலைமை குறித்தும், அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் எடுத்துரைப்பது வழக்கம்.

அந்த அடிப்படையில், முதல்வர் நேற்று சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து, சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்தும், அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்“ என்று கூறப்பட்டுள்ளது.