Home நிகழ்வுகள் ‘வானம் தேடும் சிறகுகள்’ நூல் அறிமுகம்

‘வானம் தேடும் சிறகுகள்’ நூல் அறிமுகம்

833
0
SHARE
Ad

booksரவாங், மார்ச்.6- எதிர்வரும் 8.3.2013 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரவாங் ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய மண்டபத்தில் நாட்டின் தலைசிறந்த தன்முனைப்புப் பேச்சாளர், படைப்பாளர் ‘சூப்பர் மைண்ட் டைனமிக்’ மு.கணேசனின் ‘வானம் தேடும் சிறகுகள்’ மனிதநேய நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.

செலாயாங் ம.இ.கா தொகுதி தலைவர், ம.இ.கா மத்திய செயற்குழு உறுப்பினரும் டத்தோஸ்ரீ பழனிவேலுவின் அரசியல் செயலாளருமான பழனியப்பன் தலைமை ஏற்கிறார்.

சிறப்புரையினை ரவாங் வீரகத்தி விநாயகர் ஆலயத் தலைவர் ரவீந்திரநாத் வழங்குவார். மனித நேயப் படைபான இந்நூல் வெளியீட்டில் திரளாகக் கலந்து சிறப்பிக்க வேண்டுமாய் இலக்கிய அன்பர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.