Home கலை உலகம் ரஜினிகாந்திற்காக கைகோர்க்கும் முன்னணி நட்சத்திரங்கள் – முதல்வரை சந்திக்க முடிவு!

ரஜினிகாந்திற்காக கைகோர்க்கும் முன்னணி நட்சத்திரங்கள் – முதல்வரை சந்திக்க முடிவு!

550
0
SHARE
Ad

rajinikanth-old-age-wallpaper-586x529சென்னை, மே 30 – ரஜினி இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம். தனது நடிப்பால் மட்டுமல்ல தனது நற்பண்புகளாலும் அனைவரையும் கவர்ந்தவர். தன்னால் யாரும் நஷ்டப்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கும் ரஜினியின் இந்த பண்பு தான் அவருக்கு தொடர்ந்து சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் 12-ல் வெளியானது ரஜினியின் ‘லிங்கா’ சந்தித்த தோல்வியும் அதனால், விநியோகஸ்தர்கள் ஏற்படுத்திய பரபரப்பும் அனைவரும் அறிந்த ஒன்று. போராட்டங்கள் வலுத்ததால், மொத்த நஷ்டமான 33 கோடி ரூபாயில் 12.5 கோடி ரூபாயை ரஜினிகாந்த் விநியோகஸ்தர்களிடம் கொடுத்ததாக பேசப்பட்டது.

இத்துடன் பிரச்சனை முடிந்துவிட்டதாக பார்க்கப்பட்ட நிலையில், ரஜினி கொடுத்த 12.5 கோடி ரூபாயில் 5.9 கோடியை பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதமுள்ள பணத்தை போராட்டங்களை முன்னின்று நடத்திய சிங்காரவேலன் மற்றும் சில விநியோகஸ்தர்கள் அபகரித்ததாக மற்ற விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது ‘லிங்கா’ பிரச்சினை மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

#TamilSchoolmychoice

முதல் முறை பிரச்சினை எழுந்தபோது, நீண்ட நாட்களாக மவுனம் காத்து வந்த ரஜினி, தனது பெயர் பெரிய அளவில் களங்கப்படுத்தப்படுவதால் தயாரிப்பாளரிடம் பேசி, பணத்தை திரும்பிக் கொடுத்தார். இந்நிலையில் பணம் கொடுத்த பிறகும் பிரச்சினை நீடித்து வருவதால் ரஜினிகாந்த் மன உளைச்சலில் உள்ளதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ரஜினியின் படம் வெற்றி பெறும் போது கோடி கோடியாக சம்பாதிக்கும் விநியோகஸ்தர்கள், படம் தோல்வி அடையும் சமயங்களில் ரஜினியின் பெயரை களங்கப்படுத்துவதால், இம்முறை இந்த பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும் என பல முன்னணி நடிகர்கள் ரஜினிக்கு ஆதரவாக கைகோர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ரஜினிக்கு ஆதரவாக இதுவரை நடிகர் கமலஹாசன் மட்டுமே நேரடியாக குரல் கொடுத்துள்ள நிலையில், நடிகர் விஜய் திரை மறைவில் ரஜினிக்கு ஆதரவாக பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி உள்ளதாகக் கூறப்படுகிறது.

விரைவில் முன்னணி நடிகர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தாதலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.