Home தொழில் நுட்பம் போதை தரும் உலகின் முதல் டிஜிட்டல் கருவி வெளியானது!

போதை தரும் உலகின் முதல் டிஜிட்டல் கருவி வெளியானது!

579
0
SHARE
Ad

thync-வாஷிங்டன், ஜூன் 6 –  மனிதருக்கு போதை தரும் உலகின் முதல் டிஜிட்டல் கருவி வெளியாகி உள்ளது. இந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியையும், பலருக்கு ஆச்சரியத்தையும் ஏற்படுத்தலாம். ‘தைனிக்’ (Thync) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கருவியை தலையில் அணிந்து கொண்டால் போதும், போதை வஸ்துக்களோ அல்லது சிகரெட்டோ மனிதற்குள் ஏற்படுத்தும் உடனடி புத்துணர்ச்சியை இந்த கருவி ஏற்படுத்தி விடும் என்று கூறப்படுகிறது.

திறன்பேசிகளுடனோ அல்லது தட்டைக் கணினிகளுடனோ இந்த கருவியை ‘ப்ளூடூத்’ (Bluetooth) மூலம் இணைத்து பயன்படுத்த வேண்டும். இந்த கருவியை ஏன் திறன்பேசிகளுடன் இணைக்க வேண்டும் என்றால், இந்த கருவிக்கென பிரத்யேக செயலி ஒன்று உள்ளது. மனித மூளையின் உணர்வுகளைத் தூண்டக் கூடிய செயல்முறைகளை அந்த செயலி தான் ஏற்படுத்தும். அதற்காகத் தான் இந்த இணைப்பு.

thyncஉள்ளங்கை அளவில் இருக்கும் இந்த கருவியை தலையில் அணிந்து கொண்டு, திறன்பேசிகளில் மேம்படுத்தப்பட்டுள்ள அந்த கருவிக்கான செயலியை இயக்க வேண்டும். அந்த செயலியில், எவ்வளவு நேரம் இந்த செயல்முறை இருக்க வேண்டும் என்பது போன்ற கால அளவுகளை நாம் அமைத்துக் கொள்ள முடியும்.  இதில் ஆச்சரியப்பட வைக்கும் மற்றொரு செயல்முறை என்னவென்றால் நமது மனநிலையில் எந்த அளவிற்கு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதையும் நம்மால் நிர்ணயித்துக் கொள்ள முடியும்.

#TamilSchoolmychoice

இந்த கருவியின் மூலம் மன அழுத்தம் பெருமளவில் குறைக்கப்படும் என்றும், மன அழுத்தத்தால் தான் போதை பொருட்களில் மனம் நாட்டம் கொள்கிறது, இது போன்ற கருவிகள் மூலம் உடலுக்கு தீங்கான அந்த பழக்கங்களில் இருந்து விடுபட முடியும் என்றும் கூறப்படுகிறது. தற்போது இந்த கருவியின் விலை 299 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.