Home வணிகம்/தொழில் நுட்பம் இடியாப்ப சிக்கலில் மேகி நூடுல்ஸ் – சிங்கப்பூரும் தடை விதித்தது!

இடியாப்ப சிக்கலில் மேகி நூடுல்ஸ் – சிங்கப்பூரும் தடை விதித்தது!

500
0
SHARE
Ad

maggi-nestleசிங்கப்பூர், ஜூன் 6 –  இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸிற்கு சிங்கப்பூர் அரசும் தடை விதித்துள்ளது.

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களின் உணவு கட்டுப்பாட்டு துறையின் அதிரடி நடவடிக்கைகளால் பெரும் சிக்கலில் தவித்து வருகிறது. டெல்லி, தமிழ் நாடு, பீகார் உள்ளிட்ட ஐந்திற்கும் மேற்பட்ட மாநிலங்கள் மேகி நூடுல்ஸிற்கு தடை விதித்ததைத் தொடர்ந்து அந்நிறுவனம் இந்தியா முழுவதும் தனது விற்பனையை தற்காலிகமாக நிறுத்திக் கொள்வதாக நேற்று அறிவித்தது.

இந்நிலையில் நேற்று சிங்கப்பூர் அரசும் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மேகி நூடுல்ஸிற்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட அந்நாட்டின் வேளாண் உணவு மற்றும் கால்நடை மருத்துவ ஆணையம், மேகியில் அளவிற்கு அதிகமாக வேதிப் பொருள் இருப்பதை உறுதி செய்துள்ளது. அதனைத் தொடர்ந்து அந்த அமைப்பின் பரிந்துரைகளின் படி இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஏற்கனவே நேபாள அரசும் மேகிக்கு தடை விதித்து இருப்பதால், இந்த நடவடிக்கைகள் விரைவில் நெஸ்லே நிறுவனத்தின் உலக சந்தைகளிலும் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.