Home கலை உலகம் சயிஃப் அலிகானை வைத்து பாலிவுட் படம் இயக்குகிறார் கமலஹாசன்!

சயிஃப் அலிகானை வைத்து பாலிவுட் படம் இயக்குகிறார் கமலஹாசன்!

684
0
SHARE
Ad

kamal-haasan-saif-ali-khanமும்பை, ஜூன் 6 – தூங்காவனம் படத்தில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கும் கமல் ‘அமர் ஹைய்ன்’ என்ற பாலிவுட் படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம் இரண்டாம் பாகம் படங்களைத் தொடர்ந்து தனது அடுத்த படமான தூங்காவனத்தை தொடங்கி உள்ள கமல், இதில் தனது நீண்ட நாள் உதவியாளரான ராஜேஷ் என்பவரை இயக்குனராக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான், அமர் ஹைய்ன் படம் பற்றிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. தூங்காவனம் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போதே இது பற்றிய தகவல்களை கமல் தெரிவித்து இருந்தாலும், தற்போது தான் அதில் நடிக்க இருக்கும் கதாநாயகன் கதாபாத்திரம் யார் என்பது முடிவாகி உள்ளது.

#TamilSchoolmychoice

இந்த படத்தில் பாலிவுட் நடிகர் சயிஃப் அலிகான் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்னாள் கமல் தமிழில், இயக்கி நடிக்க முடிவு செய்திருந்த ‘தலைவன் இருக்கிறான்’ படம் தான் அமர் ஹைய்னாக மாற இருக்கின்றது. இதில் மற்றுமொரு ருசீகரமான செய்தி என்னவென்றால் இதில் வில்லன் கதாபாத்திரத்தை கமலஹாசனே நடிக்க இருக்கிறார் என அவரின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.