Home அவசியம் படிக்க வேண்டியவை பிரிட்டன் குட்டி இளவரசியை முத்தமிடும் அண்ணன் ஜார்ஜ்ஜின் புகைப்படங்கள் வெளியாயின!

பிரிட்டன் குட்டி இளவரசியை முத்தமிடும் அண்ணன் ஜார்ஜ்ஜின் புகைப்படங்கள் வெளியாயின!

735
0
SHARE
Ad

princeலண்டன், ஜூன் 7 – இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியரின் குட்டி இளவரசியான சார்லோட் எலிசபெத் டயானாவிற்கு அவரது அண்ணன் ஜார்ஜ் ஆசையாக முத்தமிடும் புகைப்படத்தைக் கென்சிங்டன் அரண்மனை நேற்று இணைய தளங்களில் வெளியிட்டது.

prince1கடந்த மாதம் வில்லியம் மற்றும் கேட் தம்பதியருக்குப் பெண் குழந்தை பிறந்த போது கென்சிங்டன் அரண்மனையே விழாக் கோலம் பூண்டது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பிரிட்டனின் அரச பரம்பரையில் முதன் முறையாக ஓர் இளவரசி பிறந்து இருப்பது அரச குடும்பத்தை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இங்கிலாந்து மக்களையும் மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது.

prince2குட்டி இளவரசி அவரது பெற்றோருடன் இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டாலும், அவர் தனது அண்ணன் ஜார்ஜுடன் இருக்கும் புகைப்படங்கள் ஏனோ வெளியிடப்படாமலே இருந்து வந்தன. இந்நிலையில் தான் அவர் தனது தங்கையை மடியில் வைத்து கொஞ்சும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இந்தப் புகைப்படங்களை அவரது தாயான கேட் மிடில்டன் தான் எடுத்துள்ளார். புகைப்படங்கள் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் சமூக ஊடகங்களில் பல லட்சம் பேர் அதனைப் பார்த்தும், பகிர்ந்தும் வருகின்றனர்.

இதற்கிடையே குட்டி இளவரசிக்கு  ஜூலை 5-ம் தேதி பெயர் சூட்டு விழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.