Home நாடு சபா நிலநடுக்க மரண எண்ணிக்கை 18ஆக உயர்வு!

சபா நிலநடுக்க மரண எண்ணிக்கை 18ஆக உயர்வு!

590
0
SHARE
Ad

குண்டாசாங், ஜூன் 7 – சபா நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்தப் பேரிடரில் சிக்கிக் கொண்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 16 பேரின் மரணம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன் மேலும் இருவர் இதுவரை காணவில்லை என்றும் அதனால் மரணமடைந்துள்ளார்கள் என்று நம்பப்படுகின்றது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Mount Kinabalu

காணாமல் போன இருவர் சிங்கப்பூரிலிருந்து வந்த ஆசிரியை ஒருவரும் மாணவர் ஒருவரும் ஆவார்கள். கண்டெடுக்கப்பட்ட சில உடல் பாகங்கள் இவர்களுடையது என நம்பப்படுகின்றது. இன்னும் சில நாட்களில் மருத்துவப் பரிசோதனைகளில் இது உறுதிப்படுத்தப்படும்.

#TamilSchoolmychoice

மரணமடைந்தவர்களில் 6 பேர் மலேசியர்கள் 7 பேர் சிங்கப்பூரர்கள், பிலிப்பைன்ஸ், சீனா, ஜப்பான் நாடுகளிலிருந்து தலா ஒருவர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் மீட்புக் குழுவினரும், கினபாலு பூங்கா வழிகாட்டிகளும் 5 சடலங்களைக் கண்டெடுத்தனர்.

மீட்புக் குழுவினரின் தேடுதல் பணி நாளையும் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.