பீஜிங், ஜூன் 8 – சீனாவில், யாங்ட்ஸே ஆற்றில் கடந்த 1–ஆம் தேதி 456 பேருடன் சென்ற ‘ஈஸ்டர்ன் ஸ்டார்’ என்ற பயணிகள் கப்பல், சூறாவளியில் சிக்கி விபத்துக்குள்ளானது.
சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் லீ கெகியாங் ஆகியோரின் உத்தரவின் பேரில், மிகப்பெரிய அளவில் மீட்பு பணிகள் நடந்தன. இந்த கோர விபத்தில் 14 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்.
இதற்கிடையே கடந்த 70 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான கப்பல் விபத்து என்று கருதப்படக்கூடிய இந்த விபத்தில், பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சம்பவம் நடந்த இடத்தில் நேற்று காலை 9 மணிக்கு நினைவஞ்சலி நடத்தப்பட்டது.