Home இந்தியா ஜெயலலிதா சொத்து மதிப்பு ரூ.72 கோடியாம் – ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விபரங்கள் தாக்கல்!

ஜெயலலிதா சொத்து மதிப்பு ரூ.72 கோடியாம் – ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விபரங்கள் தாக்கல்!

641
0
SHARE
Ad

jeyaசென்னை, ஜூன் 8 – ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதலமைச்சர் ஜெயலலிதா வேட்புமனுவுடன், தனது சொத்து விபரங்களையும் தாக்கல் செய்துள்ளார்.

ஜெயலலிதா கொடுத்துள்ள சொத்து மதிப்பில் 2 டோயோட்டா கார், 1980-ம் ஆண்டுடைய அம்பாசிடர் கார், 1990-ம் ஆண்டு கண்டஸ்சா கார் உட்பட 9 கார்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ஐதராபாத்தில் உள்ள வணிகக் கட்டிடங்களின் மதிப்பு ரூ.13 கோடியே 34 லட்சத்து 70 ஆயிரத்து 990. போயஸ் கார்டன் வீட்டின் மதிப்பு (24000 சதுர அடி) ரூ.43 கோடியே 96 லட்சத்து 74 ஆயிரத்து 900.

#TamilSchoolmychoice

காஞ்சீபுரம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள விவசாய நிலங்களின் மதிப்பு ரூ.14 கோடியே 78 லட்சத்து 37 ஆயிரத்து 300 (17.93 ஏக்கர்). ஒட்டுமொத்த அசையாச் சொத்தின் மதிப்பு ரூ.72 கோடியே 9 லட்சத்து 83 ஆயிரத்து 190.

ஜெயலலிதா பெயரில் உள்ள மொத்த வங்கிக் கடன் மதிப்பு ரூ.2 கோடியே 4 லட்சத்து 2 ஆயிரத்து 987. இந்த விவரங்கள் அடங்கிய பிரதி, வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகமான சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.