Home கலை உலகம் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு விக்ரமன் மீண்டும் போட்டி

திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு விக்ரமன் மீண்டும் போட்டி

723
0
SHARE
Ad

Vikraman-reel-20

சென்னை, ஜூன் 8- தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். இதுவரை சங்கத்தின் தலைவராக இயக்குநர் விக்கிரமனும், செயலாளராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணியும், பொருளாளராக இயக்குநர் வி.சேகரும் இருந்தனர்.

இவர்களின் பதவிக்காலம் இம்மாதம் முடிவடைகிறது.எனவே,அடுத்த தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

#TamilSchoolmychoice

இதில், தலைவர் பதவிக்கு மீண்டும் இயக்குநர் விக்கிரமனே போட்டியிடுகிறார். இதே போல்,செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணியும், பொருளாளர் பதவிக்கு வி.சேகரும், துணைத் தலைவர் பதவிக்குப் பி.வாசு மற்றும் கே.எஸ்.ரவிகுமாரும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனு தாக்கல் வரும் 19-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இவர்களை எதிர்த்துப் போட்டியிடப் போகிறவர்கள் யார் என்கிற விவரம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.