Home இந்தியா ஷேக் ஹசீனாவைப் பாராட்டிய மோடியின் பேச்சு,பெண்களுக்கு எதிரானதாகத் திரிப்பு!

ஷேக் ஹசீனாவைப் பாராட்டிய மோடியின் பேச்சு,பெண்களுக்கு எதிரானதாகத் திரிப்பு!

496
0
SHARE
Ad

DespiteBeingAWoman-PM-Modi-faces-flak-for-sexist-commentபுது டெல்லி, ஜூன் 9 – இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்டை நாடான வங்காளதேசத்திற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அங்கு அந்நாட்டு அரசுடன் எல்லை தொடர்பான பேச்சுவார்த்தைகள் மற்றும் இரு நாடுகளின் நல்லுறவு தொடர்பான ஒப்பந்தங்கள் எனப் பல்வேறு சிறப்பான செயல்களைச் செய்தார். எனினும், வங்காள தேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவைப் பாராட்டுவதற்காக அவர் ஆற்றிய உரை, பெண்களி இழிவுபடுத்திப் பேசியதாகத் திரித்துக் கூறப்பட்டுள்ளது.

தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா தனது உரையில் தெரிவித்து இருந்தார். இதற்காக அவருக்குப் பாராட்டு தெரிவித்த மோடி, தனது உரையில், “பிரதமர் ஷேக் ஹசீனா ஒரு பெண். ஒரு பெண்ணாக இருந்து கொண்டு தீவிரவாத செயல்களை முற்றிலும் ஒடுக்க வேண்டும் என்று கூறுகிறார். எந்த ஒரு அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ள அவருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

மோடியின் இந்தப் பேச்சினால் ஆத்திரமடைந்துள்ள பெண்கள் பலர், டுவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர். ‘பெண்ணாக இருந்து கொண்டு’  என அவர் பயன்படுத்திய வார்த்தைகள் ஒட்டுமொத்த பெண்களையும் இழிவுபடுத்துவதாக உள்ளது. பெண்களாலும் அனைத்தையும் சாதிக்க முடியும். அதை மோடி உணரவேண்டும். அவரது ஆணாதிக்கத்தனமே இத்தகைய வார்த்தைகளைப் பேசத் தூண்டுகிறது எனப்  பல்வேறு வகையில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

இதற்காக அவர்கள் நேற்று டுவிட்டரிலும் ஒரு ‘ஹேஷ் டேக்’  (Hash Tag) ஐ உருவாக்கித் தங்கள் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். இதற்கு மறுப்போ, விளக்கமோ மோடி இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்படத்தக்கது.

ஒரு நாட்டின் பிரதமர் எந்தப் பெண்ணையும் இழிவுபடுத்திப் பேச மாட்டார் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.பேச்சில் சாதாரணமாகக் குறிப்பிடும் ஒரு விசயத்தைப் பெரிதுபடுத்தக் கூடாது என்பதே இதன் மூலம் நாம் கூறும் செய்தியாகும்.