Home கலை உலகம் விரைவில் அஸ்ட்ரோ அனைத்துலக சூப்பர்ஸ்டார் 2015!

விரைவில் அஸ்ட்ரோ அனைத்துலக சூப்பர்ஸ்டார் 2015!

746
0
SHARE
Ad

admin-ajaxகோலாலம்பூர், ஜூன் 9 – அஸ்ட்ரோ தனது அதிக வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான சூப்பர்ஸ்டார் பாடல் திறன் போட்டியை, இந்த ஆண்டு விண்மீன் எச்டி அலைவரிசையின் வாயிலாக, அனைத்துலக அளவில் நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த அனைத்துலகப் பாடல் திறன் போட்டியில் கனடா, மொரீசியஸ்,  சிங்கப்பூர், இந்தியா மற்றும் மலேசியா என ஐந்து நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

அஸ்ட்ரோவால் கடந்த 14 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் இந்நிகழ்ச்சி, இந்த ஆண்டு அனைத்துலக அளவில் போட்டி நடத்தப்பட்டு, உலக அளவில் திறமைசாலிகளை அறிமுகப் படுத்தவுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கான அதிகாரப்பூர்வ செய்தியாளர் சந்திப்பு இன்று மதியம் 3.30 மணியளவில், தலைநகரிலுள்ள பிரபல தங்கும்விடுதியில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியாளர் சந்திப்பில் உலக அளவில் பிரபலமான சில முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.