Home நாடு மிகப் பெரிய குழப்பங்களுக்குக் காரணம் மகாதீர் தான் – நஜிப் குற்றச்சாட்டு

மிகப் பெரிய குழப்பங்களுக்குக் காரணம் மகாதீர் தான் – நஜிப் குற்றச்சாட்டு

739
0
SHARE
Ad

NAJIB6கோலாலம்பூர், ஜூன் 9 – முன்னாள் பிரதமர் மகாதீர் முகமட் தனக்கு எதிராகக் கூறி வந்த குற்றச்சாட்டுக்களுக்கு மறைமுகமாகப் பதிலளித்துக் கொண்டிருந்த பிரதமர் நஜிப் துன் ரசாக், தற்போது நேரடியாகவே எதிர்க்கொள்ளத் தயாராகிவிட்டார்.

தனது ஆட்சியில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய குழப்பங்களுக்கெல்லாம் காரணம் முன்னாள் பிரதமர் மகாதீர் தான் என நேற்று தனது வலைப்பக்கத்தில் எழுப்பப்பட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

எதிர்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டுகளையும், இணையம் வழியாகக் கூறப்பட்ட பொய்களையும் நம்பிக் கொண்டு, மகாதீர் தனக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறி குழப்பங்களை விளைவித்துள்ளதாகவும் நஜிப் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“ஆயிரம் முறை பொய்யைப் பரப்பினாலும் அது எப்போதும் உண்மையாகி விடாது. அது போன்ற அவதூறுகளைப் பரப்பும் இணையத்தளங்கள் மூலம், இன்று பெரிய குழப்பம் நிகழ்ந்துவிடுமா என்று எண்ணிக் கொண்டிருக்கும் மகாதீரைக் கண்டு ஆச்சரியப்பட ஒன்றுமில்லை” இவ்வாறு நஜிப் தெரிவித்துள்ளார்.