Home இந்தியா வேட்பாளர் புகைப்படத்துடன் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம்- முதல் முறையாக அறிமுகம்

வேட்பாளர் புகைப்படத்துடன் மின்னணு வாக்குப் பதிவு எந்திரம்- முதல் முறையாக அறிமுகம்

518
0
SHARE
Ad

evmசென்னை, ஜூன்9-  ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் புகைப்படத்துடன் கூடிய ஓட்டுப் பதிவு எந்திரம் அறிமுகப்படுத்தப்பட  இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

தமிழகத்திலேயே முதன்முறையாக இது அறிமுகப்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில்  ஒரே பெயர் கொண்ட வேட்பாளர்கள் பலர் போட்டியிடும் போது, யாருக்கு என்ன சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது என்பது தெரியாமல், வாக்காளர்கள் குழப்பம் அடைகின்றனர். அத்தகைய குழப்பங்களைப் போக்கவே இம்முறை அமல்படுத்தப்படுகிறது.

#TamilSchoolmychoice

இதன் மூலம் வாக்காளர்களை  எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். வேட்பாளரின் புகைப்படத்துடன் பெயர்,சின்னம் போன்றவையும்  இடம்பெற்றிருக்கும்.

மேலும், வாக்குப்பதிவு மையத்திற்கு வெளியிலும் புகைப்படத்துடன் கூடிய தகவல்கள் ஒட்டப்பட்டிருக்கும்.

அதேபோல், தபால் ஓட்டிலும், வேட்பாளர் பெயர் அருகில், அவரது புகைப்படம் இடம் பெற உள்ளது எனத் தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா தெரிவித்தார்.