Home கலை உலகம் கமல்ஹாசன் மீண்டும் இந்தியில் நடிக்கிறார்.

கமல்ஹாசன் மீண்டும் இந்தியில் நடிக்கிறார்.

676
0
SHARE
Ad

Kamalசென்னை, ஜூன் 9- கமல்ஹாசன் நடித்து இந்தியில் வெளியான கடைசிப் படம் மும்பை எக்ஸ்பிரஸ். இப்படம் கடந்த 2005 -ஆம் ஆண்டு வெளியானது.

கடந்த 10 ஆண்டுகளாக அவர் இந்திப் படங்களில் நடிக்கவில்லை. தமிழ்ப் படங்களில் மட்டுமே தனது கவனத்தைச் செலுத்தி வந்தார்.

தற்போது மீண்டும் இந்திப் படத்தில் நடிக்கவிருப்பது, திரையுலகத்தினரைக் கவனிக்க வைத்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்தியில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இயக்கவும் உள்ளார். ‘அமர் ஹே’என்ற படத்தை இயக்கி அதில் கதாநாயகனாகவும் நடிக்கிறார்.

அரசியல் சூழ்ச்சியைக் கதைக் கருவாகக்  கொண்ட இந்தப் படத்தில் சயீப் அலிகான் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார்.

வீரேந்திர கே.அரோரா மற்றும் அர்ஜூன் என்.கபூர் ஆகியோர் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

இது கமல்ஹாசனின் நீண்ட நாள் கனவுப்படம் ஆகும். இதற்கான கதையை அவர்  கடந்த ஆறு ஆண்டுகளாக எழுதி வருகிறார்.

இந்தப் படத்தின் ஆரம்பகட்டப் படப்பிடிப்புகள் மும்பை மற்றும் வட இந்தியப் பகுதிகளில் தொடங்கி நடைபெற உள்ளன.

மேலும், லண்டன், துபாய், ஜோர்டான், அமெரிக்கா முதலிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.