Home Uncategorized தமிழ் அகராதியில் புதிதாக 1000 சொற்கள் சேர்ப்பு

தமிழ் அகராதியில் புதிதாக 1000 சொற்கள் சேர்ப்பு

2491
0
SHARE
Ad

Tamil dictionaryசென்னை, ஜூன்9- அறிவியல், வர்த்தகம், தகவல் தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் உள்ள பிற மொழிச் சொல்லிற்கு இணையான 1000 தமிழ்ச் சொற்களைத் தமிழ் வளர்ச்சித் துறை கடந்த சில வருடங்களில் உருவாக்கியுள்ளது.

இதற்காக 11 பேர் கொண்ட சொல் வங்கிக் குழுவைத் தமிழக அரசு உருவாக்கியுள்ளது. இக்குழுவில்  தமிழ் அறிஞர்கள், மூத்தப் பத்திரிகையாளர்கள், கவிஞர்கள், ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் ஆகியோர் உள்ளனர்.

இவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் கூடி புதிய தமிழ்ச் சொற்கள் தொடர்பான விவாதங்களை நடத்துவார்கள்.

#TamilSchoolmychoice

தொழில்நுட்பச் சொற்களுக்கு இணையான புதிய தமிழ்ச் சொற்களை உருவாக்குவதுதான் இவர்களுடைய பணி.

சொற்கள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அரசிடம் அவற்றுக்கு அனுமதி வாங்கப்படும். பிறகு அரசு நிர்வாக அகராதியில் இணைக்கப்படும்.

அகராதியின் பிரதிகள் அரசுத் துறைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பின்னர் இந்தச் சொற்கள் அரசு அறிக்கையில், கோப்புகளில் இடம்பெற வாய்ப்புகள் உருவாகும்.

இந்தப் புதிய சொற்கள் தினசரிகள், தொலைக்காட்சி நிறுவனங்கள், வானொலி அலுவலகங்கள், வார இதழ்கள் போன்றவற்றுக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆட்சிச் சொல் அகராதியைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. இது அரசு அலுவலகங்களில் கடிதங்களைப் பிழையில்லாமல் தமிழில் எழுதப் பெரிதும் பயன்படும்.

தகவல் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் எம். ராஜாராம், 650 பக்கங்கள் கொண்ட எட்டாவது ஆட்சிச் சொல் அகராதியைத் தயாரிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகிறார்.

உதாரணத்திற்குச் சில புதிய தமிழ்ச் சொற்கள்:

Smartphone – திறன்பேசி

Inbox – உள் பேழை

PIN – தன் அடையாள எண்

SMS – சிற்றஞ்சல்

SIM card – செல்பேசி அட்டை