Home இந்தியா பட்டப்படிப்புப் போலிச் சான்றிதழ்: டில்லி சட்ட அமைச்சர் கைது!

பட்டப்படிப்புப் போலிச் சான்றிதழ்: டில்லி சட்ட அமைச்சர் கைது!

611
0
SHARE
Ad

delhi-law-minister-jitender-singh-tomar-should-be-sacked-congressபுதுடில்லி, ஜூன்9-  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருப்பவர் ஜிதேந்தர் தோமர்.

இவர் முந்தைய காலத்தில் அரசிடம் வழங்கிய பட்டச்சான்று போலி என்ற புகார் எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.

இந்நிலையில், பட்டச் சான்று போலி என்பது உறுதியாகி டில்லி காவல்துறையினர் தோமரைக் கைது செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அவர் டில்லி காஸ்குவாஸ் காவல்நிலையத்தில் வைத்து  விசாரிக்கப்பட்டு வருகிறார்.

தோமர் கைது தொடர்பாக எவ்வித முன்னறிவிப்புக் கடிதமும் (notice) வழங்கப்படவில்லை என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

மேலும்,பாரதீய ஜனதா கட்சி எங்களை இதன்மூலம் மிரட்டிப் பார்க்கிறது. இதற்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்றும் கூறியுள்ளது.

ஆனால், பாரதீய ஜனதா கட்சி,” ஏமாற்றுக்காரர்கள்;மோசடி பேர்வழிகள் கொண்டது ஆம் ஆத்மி என்பது இதன்மூலம் உறுதியாகிறது. தோமரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து விலக கெஜ்ரிவால் கேட்டுக் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளது.

சட்டத்துறை அமைச்சர் ஒருவரே போலிச் சான்றிதழ் புகாரில் கைது செய்யப்பட்டிருப்பது  மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய அமைச்சரே சட்டத்திற்குப் புறம்பாக நடக்கலாமா? சட்டத்தை ஏமாற்றலாமா?

அவரைக் கைது செய்திருப்பதன் மூலம் சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது என்று ஒருவாறு மகிழ்ச்சியடையலாம்.சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மார்தட்டிக் கொள்ளலாம்.