Home உலகம் எங்கள் பகுதிக்குள் இந்திய ராணுவம் வரவில்லை – மியான்மர் அரசு மறுப்பு!

எங்கள் பகுதிக்குள் இந்திய ராணுவம் வரவில்லை – மியான்மர் அரசு மறுப்பு!

488
0
SHARE
Ad

BCIM-Map2யங்கூன், ஜூன் 11 – மணிப்பூர் தீவிரவாதிகளை மியான்மருக்குள் புகுந்து இந்திய ராணுவம் வேட்டையாடியதாக மத்திய அரசு கூறி வருகிறது.

இந்நிலையில், மியான்மர் அரசு அதை மறுத்துள்ளது. இதுபற்றி மியான்மர் அதிபர் அலுவலக இயக்குனர் ஜா ஹதாய் கூறியதாவது:-

“களத்தில் உள்ள மியான்மர் ராணுவம் அளித்த தகவலின்படி, இந்திய-மியான்மர் எல்லையில், இந்திய பகுதிக்குள்தான் ராணுவ நடவடிக்கை நடந்துள்ளதாக நாங்கள் அறிகிறோம்”.

#TamilSchoolmychoice

“மேலும், அண்டை நாடுகளை தாக்குவதற்கோ, அங்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கோ எந்த வெளிநாட்டு தீவிரவாதிகளும் எங்கள் மண்ணை பயன்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என அவர் தெரிவித்துள்ளார்.