Home கலை உலகம் இயக்குநர் சங்கம் சார்பில் புதிய திரையரங்கம் கட்ட விஜய் ரூ.15 லட்சம் நிதியுதவி!

இயக்குநர் சங்கம் சார்பில் புதிய திரையரங்கம் கட்ட விஜய் ரூ.15 லட்சம் நிதியுதவி!

539
0
SHARE
Ad

Puliசென்னை, ஜூன் 11 – தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் சார்பாக கட்டப்பட்ட புதிய திரையரங்க கட்டுமான பணிக்கு, இளைய தளபதி விஜய் ரூ. 15 லட்சம் உதவித் தொகை அளித்துள்ளார்.

சமீபத்தில் இயக்குநர்கள் சங்கம் சார்பாக புதிய திரையரங்கம் ஒன்று வளசரவாக்கத்தில் கட்டப்பட்டது. சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பயன்பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த திரையரங்கத்தின் கட்டுமானத்திற்காக, ‘விஜய்’ ரூ.15 லட்சம் கொடுத்து உதவி செய்துள்ளார்.

இதுதவிர்த்து, புதிதாக ஒரு கட்டிடம் கட்டவும் விஜய் பணம் கொடுத்துள்ளார். இயக்குநர்கள் சங்க உறுப்பினர்கள் , சினிமா துறையைச் சேர்ந்த பலரும் நிதியுதவி செய்துள்ள இந்த கட்டிடத்திற்கு, மறைந்த மாபெரும் இயக்குநர் கே.பாலசந்தரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

இந்த கட்டிடத்தில் உதவி இயக்குநர்கள் எடுக்கும் குறும்படங்கள், மற்றும் கலைஞர்களின் நாடகங்கள் என வாராவாரம் திரையிடப்பட்டு தரமான படங்களை பெரிய திரைக்கு கொண்டுவரும் திட்டத்தில் உள்ளனராம்.

இதனால் பல நல்ல கதைகள், குறும்படங்களுடன் தயாரிப்பாளர்களுக்காக காத்திருக்கும் பலருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.