Home இந்தியா ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து 50 வேட்பாளர்கள் மனுத் தாக்கல்!

ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதாவை எதிர்த்து 50 வேட்பாளர்கள் மனுத் தாக்கல்!

407
0
SHARE
Ad

jayalalitha1சென்னை, ஜூன் 11 – சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து 50 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜெயலலிதாவுக்காக காலி செய்யப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதியில் ஜூன் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத் தாக்கல் ஜூன் 3-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது.

தேர்தல் அதிகாரி சவுரிராஜனிடம் முதல்வர் ஜெயலலிதா, சமூக சேவகர் டிராபிக் ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன் உள்பட மொத்தம் 51 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மாற்று வேட்பாளர்களின் மனுக்கள் உள்பட மொத்தம் 53 மனுக்கள் தாக்கலாகியுள்ளன. இந்தத் தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாக அதிமுக மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை மட்டுமே போட்டியிடுகின்றன.

jayalalithaஇன்று வேட்பு மனுக்கள் அனைத்தும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. 11 மணிக்கு பரிசீலனை தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து மனுக்களை திரும்பப் பெற விரும்புவோர் 13-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறலாம்.

அதன் பின்னர் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். 27-ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்குப் பதிவு நடைபெற்று, 30-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.