Home இந்தியா நடுக்கடலில் எண்ணெய்ப் படலம் கண்டுபிடிப்பு:குட்டி விமானத்தைத் தேட பாராமோட்டார்!

நடுக்கடலில் எண்ணெய்ப் படலம் கண்டுபிடிப்பு:குட்டி விமானத்தைத் தேட பாராமோட்டார்!

522
0
SHARE
Ad

paraசென்னை, ஜூன் -11- மாயமாய் மறைந்து போன இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான குட்டி விமானத்தைத் தேடும் பணியில் இதுவரை கப்பல்கள், படகுகள், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், நீர் மூழ்கிக் கப்பல்கள் போன்றவை ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இவை தவிர நீர்மூழ்கி வீரர்கள் மற்றும் மீனவர்களும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும்,மும்பை, டில்லி, கோவாவில் இருந்து நிபுணர்களும் வந்து களமிறங்கி இருக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

போதாக்குறைக்கு இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிலையமும் இந்தத் தேடும் பணியில் உதவிக்கு வந்துள்ளது.

இருப்பினும் இதுவரையிலும் எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நடுக்கடலில் ஓர் இடத்தில் எண்ணெய்ப் படலம் மிதப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். அந்த எண்ணெய்ப் படலத்தைச் சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தேடும் பணியில் புதிதாகப் ‘பாராமோட்டார்’ என்னும் கருவியும் களமிறங்குகிறது.

பாராமோட்டாரின் செயல்பாடு பற்றிச் சென்னை ஏரோஸ்போட்ஸ் என்கிற தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பயிற்சியாளர் மணிகண்டன் கூறியதாவது:

கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் ஏதேனும் பொருட்கள் காணாமல் போனால் அதைத் தேடும் பணிக்காகப் பயன்படுத்தப்படுவது தான் இந்த பாராமோட்டார்.

இது குறைந்தது 3 அடி உயரத்தில்  பறக்கக் கூடியதாகும். கடல் நீர் மட்டத்தில் மிகவும் தாழ்ந்து பறக்க முடியும் என்பதால் கடலில் மிதக்கும் அனைத்துப் பொருட்களையும் எளிதில் அடையாளம் காண முடியும்.

இது குறைந்த பட்சம் 30 கிலோ மீட்டர் வேகத்தில் இருந்து அதிக பட்சமாக 100 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் செல்லக் கூடியதாகும்.

இது ஒரு விமானி மட்டும் இயக்கும் வகையில் அமைக்கப்பட்டதாகும். கடலில் உள்ள பொருட்களை அடையாளம் காட்டுவதற்காக மற்றொருவரை அழைத்துச் செல்லும் வகையில் கூடுதலாக ஒரு இருக்கையும் உள்ளது.

இந்தப் பாராமோட்டார் மூலம் எளிதில் காணாமல் போன பொருட்களைக் கண்டுபிடிக்கலாம்.

இவ்வாறு அவர் விளக்கம் அளித்தார்.

இதன் பிறகாவது ஏதேனும் தடயம் கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.