Home நாடு 1எம்டிபி குறித்து மகாதீர் குற்றச்சாட்டுகள் – மறுக்கும் அருள் கந்தா

1எம்டிபி குறித்து மகாதீர் குற்றச்சாட்டுகள் – மறுக்கும் அருள் கந்தா

593
0
SHARE
Ad

Arun-Kanda-CEO-1MDBகோலாலம்பூர், ஜூன் 11 – 1எம்டிபி குறித்து துன் மகாதீர் எழுப்பியுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அந்நிறுவனத்தின் தலைவரும் செயல் இயக்குநருமான அருள் கந்தா கந்தசாமி (படம்) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

மகாதீரின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உள்நோக்கம் கொண்டவை என்றும் அவர் சாடியுள்ளார்.

“தொழில்முறை நிபுணர் என்ற வகையில் எனது செயல்பாடுகள் அனைத்துக்கும் பொறுப்பேற்பதுடன், 1எம்டிபி வாரியம், அதன் பங்குதாரர்கள் மற்றும் நிதியமைச்சுக்கு பதிலளிக்க வேண்டியவனாகிறேன். இதில் ஆடிட்டர் ஜெனரல், பேங்க் நெகாரா, பொதுக் கணக்குக் குழுவும் அடங்கும்,” என நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அருள் கந்தா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தான் குறிப்பிட்டவர்கள் மட்டுமே அனைத்து விவரங்களையும் அறிந்தவர்கள் என்றும், தாம் பொய்களைக் கூறியதாகக் கூறப்படுவது குறித்து விசாரிப்பதற்கு சட்டப்பூர்வ அதிகாரம் படைத்தவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Dr Mahathir

தொழில் ரீதியில் எனது கடமைகளை தொடர்ந்து செயல்படுத்த இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளவர்கள் 1 எம்டிபியின் உண்மை நிலை குறித்து அறிவதற்கேற்ப அனைத்து தகவல்களையும் அளிக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

“1எம்டிபியின் 42 பில்லியன் தொகை எங்கே என மகாதீர் கேள்வி எழுப்பினார். இதையடுத்து வெளியிடப்பட்ட நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கையில் அந்தத் தொகை எவ்வாறு செலவிடப்பட்டது என்பதற்கான விவரங்கள் உள்ளன. இப்போதோ, அந்த தொகை எங்கே போனது என்பது கேள்விக்குரியது என்கிறார் மகாதீர்.

“1எம்டிபியில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருக்குமானால் பாரபட்சமின்றி சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டை நானும் ஆதரிக்கிறேன். எனது செயல்பாடு மட்டுமல்லாது, 1 எம்டிபியின் செயல்பாடு தொடர்பிலும் எனது நிலைப்பாடு இதுதான்,” என அருள் கந்தா மேலும் தெரிவித்துள்ளார்.