Home இந்தியா கெல்லாக்ஸ் உட்பட 500 பொருள்கள் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு!

கெல்லாக்ஸ் உட்பட 500 பொருள்கள் கருப்புப் பட்டியலில் சேர்ப்பு!

509
0
SHARE
Ad

sasபுதுடில்லி, ஜூன் 11- மேகி நூடுல்ஸ் மீதான தடையைத் தொடர்ந்து, உடல் நலத்திற்குக் கேடு விளைவிக்கும் 500 வகையான உணவுப் பொருட்களுக்கு உணவுப் பாதுகாப்பு ஆணையம் தடை விதித்துள்ளது.

தடை விதிக்கப்பட்டவைகளில் டாடா ஸ்டார்பக்ஸ், கெல்லாக்ஸ், வெங்கிஸ், ரான்பாக்ஸி உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் முக்கியமானவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவற்றில் டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவனப் பொருட்கள் மட்டும் 32 ஆகும். இவை பெரும்பாலும் சாஸ் மற்றும் சிரப் வகைகள்.

#TamilSchoolmychoice

குறிப்பிட்ட இந்தப் பொருட்களில் சர்க்கரை, காரமல், உப்பு, கன உலோகங்கள், காபின், இரும்புக் கலவை முதலியவை அளவுக்கு அதிகமாகக் கலக்கப்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், இவற்றிற்கு உணவுப் பாதுகாப்பு ஆணையம் தடை உத்தரவு பிறப்பித்திருப்பதாகத் தெரிகிறது.