Home நாடு “பில்லியன் கணக்கில் திருடர்கள் கொள்ளையடிப்பதைக் காட்டிலும் குழப்பங்களே மேல்” – மகாதீர்

“பில்லியன் கணக்கில் திருடர்கள் கொள்ளையடிப்பதைக் காட்டிலும் குழப்பங்களே மேல்” – மகாதீர்

585
0
SHARE
Ad

mahathir-mohamadகோலாலம்பூர், ஜூன் 11 – பிரதமர் நஜிப் துன் ரசாக்குடன் ஏற்பட்டுள்ள மோதல், விமர்சனங்கள் அல்லது பில்லியன் கணக்கில் திருட்டை அனுமதிப்பது இவற்றுக்கு இடையில் இருப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

“விமர்சனங்கள் எழலாம், ஆனால் விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக பில்லியன் கணக்கில் ரிங்கிட்கள் திருடப்படுவதை அனுமதிக்க முடியுமா?” என்று மகாதீர் இன்று தனது வலைத்தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

குழப்பத்திற்குக் காரணம் மகாதீர் தான் என்று நஜிப் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மகாதீர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“நான் குழப்பங்களுக்குக் காரணமாக இருக்கிறேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நான் அதன் பின்னால் இருப்பதற்குக் காரணம் இந்த நாட்டில் உருவாகியுள்ள பயம் தான்”

“1எம்டிபி-ஆல் பல பில்லியன் ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதை மக்கள் அறிவார்கள். அவர்கள் அதைத் தெரிந்து கொள்ளும் நிலையில் உள்ளார்கள். ஏனென்றால் அந்த இழப்பிற்கான ஆதாரங்களைப் பார்க்கிறார்கள்.”

“ஆனால் அவர்கள் பயப்படக் காரணம் அரசாங்கம் தங்கள் மீது நடவடிக்கை எடுத்துவிடுமோ என்பதால் தான். அவர்கள் தங்களது வேலைகளை இழப்பார்கள் அல்லது ஒப்பந்தங்களை அல்லது பட்டங்களின் மீது கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகளை” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.