Home உலகம் இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா அமைச்சராகப் பதவியேற்பு!

இலங்கை கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா அமைச்சராகப் பதவியேற்பு!

596
0
SHARE
Ad

sanathjayasuriya17_630கொழும்பு, ஜூன் 11 – இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜெயசூர்யா, அந்நாட்டு அதிபர் சிறிசேனவின் அரசில் துணை அமைச்சராக புதன்கிழமை பதவியேற்றார்.

அவருடன் திலங்கா சுமதிபாலா, எரிக் வீரவர்ட்ஸ்னே, விஜயா தனநாயகே ஆகிய 3 பேரும் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். ராஜபட்சே தலைமையிலான முந்தைய அரசில் ஜெயசூர்யா துணை அமைச்சராகப் பதவி வகித்தார்.

அவர் தனது சொந்த மாவட்டமான மாத்தறையில் இருந்து கடந்த 2010-ஆம் ஆண்டில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

#TamilSchoolmychoice

தற்போது அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ள நான்கு பேரும் இலங்கை சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர்களாவர். ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்த 4 பேர் அண்மையில் பதவி விலகி, அக்கட்சியில் ராஜபட்சேவின் கட்சியில் இணைந்தனர்.

அவர்களுக்குப் பதிலாகவே தற்போது ஜெயசூர்யா உள்ளிட்ட 4 பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவராக இருக்கும் அதிபர் சிறீசேனா, கட்சியில் தனது கரத்தை வலுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

அக்கட்சியில் தற்போதும் ராஜபட்சே அணி பலமுள்ளதாக விளங்குகிறது. தேர்தல் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான 20-ஆவது அரசியல்சாசன சட்டத்திருத்தத்தைச் செய்யவும்,

வரும் செப்டம்பர் மாதத்துக்குள் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி வெற்றி பெறவும் கட்சியின் முழு ஆதரவும் அதிபருக்குத் தேவைப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.