Home கலை உலகம் ‘காக்கா முட்டை’ படம் ஒரு வாரத்தில் ரூ.19.33 கோடி வசூலித்து சாதனை!

‘காக்கா முட்டை’ படம் ஒரு வாரத்தில் ரூ.19.33 கோடி வசூலித்து சாதனை!

786
0
SHARE
Ad

kaakka muddaiசென்னை, ஜூன் 11 – ‘காக்கா முட்டை’ படம் வெளியாகி நேற்று வரை ரூ.19.33 கோடி வசூலித்து சாதனைப் படைத்துள்ளது. இப்படத்தைத் தயாரிக்க ரூ.50 லட்சம் செலவழித்திருப்பார்களா என்பதே சந்தேகம்தான்.

ஆனால், இப்படத்தை அனைத்துலக திரைப்பட விழாவிற்கு எடுத்துச் செல்ல கொஞ்சம் செலவாகியிருந்தாலும், பல விழாக்களில் பரிசுகளை வென்று ஈடு கட்டிவிட்டது ‘காக்கா முட்டை’.

தற்போது, இப்படம் வசூல் சாதனைப் படைத்துவருகிறது. படம் வெளியாகி 5 நாட்களில் ரூ.11 கோடியைக் குவித்துள்ளது. தமிழ்நாட்டில் 309 திரையரங்குகளிலும், வெளிநாட்டில் 170 திரையரங்குகளிலும் வெளியானது இப்படம்.

#TamilSchoolmychoice

படம் வெளியான முதல் நாளில் ரூ.90 லட்சம் வசூலித்தது. 5-வது நாளில் ரூ.11 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. தொடர்ந்து பல சாதனைகளை படைத்து வரும் இப்படம், ஒரு வாரத்தில் ரூ.19.33 கோடி வசூலித்து புதிய சாதனைப் படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.