Home நாடு கினபாலு விவகாரம்: சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள 4 வெளிநாட்டவர்கள்!

கினபாலு விவகாரம்: சிறைத் தண்டனையை எதிர்நோக்கியுள்ள 4 வெளிநாட்டவர்கள்!

563
0
SHARE
Ad

கோத்தகினபாலு, ஜூன் 11 -கினபாலு மலைச் சிகரத்தில் அநாகரிக செயலில் ஈடுபட்ட வெளிநாட்டவர்களுக்கு அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 3 மாத சிறைத்தண்டனை கிடைக்கக்கூடும்.

நிர்வாணப் புகைப்படம் எடுத்துக் கொண்ட 4 வெளிநாட்டவர்கள், பொது இடத்தில் அநாகரிக நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர்.

strippers

#TamilSchoolmychoice

குற்றவியல் சட்டம் 294 (ஏ) பிரிவின் கீழ் அவர்கள் விசாரிக்கப்பட இருப்பதாக வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இதன் வழி குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் நால்வருக்கும் 3 மாத சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

நேற்று புதன்கிழமை காலை 10.30 மணியளவில் 4 வெளிநாட்டவர்களும் ரனாவ் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். நால்வரில் கனடாவைச் சேர்ந்த 23 மற்றும் 22 வயதான சகோதரிகளும், 23 வயது டச்சு ஆடவரும், 24 வயது இங்கிலாந்து பெண்ணும் அடங்குவர்.

கனடாவைச் சேர்ந்த இரு சகோதரிகளும், டச்சு ஆடவரும் காராமுன்சிங் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாலை சரணடைந்தனர். இங்கிலாந்து பெண் அன்றைய மதியம் தவாவில் கைது செய்யப்பட்டார்.

கடந்த மே 30ஆம் தேதியன்று சபா பூங்காவில் 10 வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் நிர்வாண கோலத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், அப்பகுதியில் சிறுநீர் கழித்தும் அநாகரிக செயலில் ஈடுபட்டதாக அப்பூங்கா நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.

அவர்களின் இச்செயலுக்கு சபா பூர்வகுடி மக்களும், பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.