Home இந்தியா யோகா நாடகம் நடத்துகிறார் மோடி- காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாடல்!

யோகா நாடகம் நடத்துகிறார் மோடி- காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சாடல்!

715
0
SHARE
Ad

thikபுதுடில்லி, ஜூன் 11- இந்தியப் பிரதமர் மோடி, யோகாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அனைவரும் யோகாவைக் கற்றுக் கொள்ள வலியுறுத்தியும் வருகிறார்.

இதுகுறித்துக் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திக்விஜய் சிங் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

“நான் 40 ஆண்டுகளாக யோகாவையும் மூச்சுப் பயிற்சியையும் செய்து வருகிறேன். யோகாவில் கூட மோடி அரசியலைப் புகுத்திவிட்டார்.

#TamilSchoolmychoice

இதற்குக் காரணம் என்ன தெரியுமா? மோடியிடம் புதிதாக அறிவிக்க வேறு எந்தத் திட்டங்களும் உருப்படியாய் இல்லை.

அதனால் தான் இதுபோன்ற நாடகங்களை நடத்தி மக்களைத் திசை திருப்பப் பார்க்கிறார்.”

இவ்வாறு அவை மோடியைச் சாடியுள்ளார். இதற்கு மோடி எந்தப் பதிலும் இதுவரை தெரிவிக்கவில்லை.