காட்மாண்டு, ஜூன்11- நேபாளத்திற்கு இது சோதனைக்கு மேல் சோதனைக் காலம் போலிருக்கிறது. ‘பட்டகாலிலே படும்; கெட்ட குடியே கெடும்’ என்பதைப் போல், ஏற்கனவே பூகம்பம் ஏற்பட்டுப் பல்லாயிரக் கணக்கான மக்கள் உயிர் இழந்த அவலம் நடந்தேறியது.
இப்போதோ கனமழைபெய்து நிலச்சரிவு ஏற்பட்டு 6 கிராமங்கள் பாதிப்புக்குள்ளாகி 30 பேருக்கு மேல் உயிர் இழந்துள்ளனர். 12 பேரைக் காணவில்லை.
இதுதொடர்பாக மாவட்டத் தலைமை அதிகாரி சுரேந்திரா கூறிய தகவல்கள் பின்வருமாறு:
“தாப்லேஜங் மாவட்டத்தில் கிராமம் ஒன்றில் மக்கள் தூங்கிக் கொண்டு இருந்தபோது நேற்று நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தலைமையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
காயம் அடைந்தவர்களை மீட்புக் குழுவினர் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர்.
நிலச்சரிவு காரணமாக அப்பகுதியில் பாதுகாப்புப் படை குவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 30 சடலங்கள் மீட்கப்படுள்ளன.
இன்னும் 12 பேரைக் காணவில்லை என்பதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரக்கூடும்.