Home கலை உலகம் சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடித்த கன்னடப் படம் நாளை வெளியாகிறது.

சிவகார்த்திகேயன் சிறப்புத் தோற்றத்தில் நடித்த கன்னடப் படம் நாளை வெளியாகிறது.

582
0
SHARE
Ad

Siva-Kartikeyan-with-Kannada-superstar-shivrajkumar-1பெங்களூர், ஜூன் 11- மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் மகன்களில் ஒருவரான சிவராஜ்குமார் கதாநாயகனாக நடிக்கும் கன்னடப் படம் ‘வஜ்ர கயா’.

இந்தப் படத்தில் ஒரு சிறப்பு அம்சம் உண்டு. அது என்னவென்றால், தமிழ்த் திரையுலகின் இளம் நாயகன் சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில்  சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல; மலையாளப் படத்தின் சூப்பர் ஆக்டர் திலீப், தெலுங்குப் படத்தின் அதிரடி நாயகன் ரவிதேஜா, கன்னடப் படத்தின் பிரபல  நடிகர் ரவிச்சந்திரன் ஆகியோரும் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கன்னடப் படவுலகின் முன்னணி நாயகன் சிவராஜ்குமாருடன் தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நாயகர்கள் இணைந்து நடித்திருப்பது வஜ்ர கயா படத்திற்கு மிகப் பெரிய விளம்பரத்தைத் தேடித் தந்திருப்பதோடு, கன்னட ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே இப்படம் நாளை வெளியாகிறது.

இப்படம் வெளியான பின்பு கன்னட ரசிகர்கள் மத்தியிலும் சிவகார்த்திகேயனுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நம்பலாம்.