சென்னை, ஜூன் 11- முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 24 ஆண்டுகளாகச் சிறைவாசம் அனுபவித்து வரும் பேரறிவாளன் சிறிநீரகத் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு,தற்போது வேலூர் சிறையிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாகப் புதிய தலைமுறை.தொலைக்காட்சியில் மனம் திறந்து பேசியிருக்கிக்கிறார்.
அவர் பேச்சின் சில பகுதிகளைக் காண்போம்:
தமிழக அரசு உங்களை விடுதலை செய்யும் முயற்சியைத் தடுக்கும் வகையில் முன்னாள் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
வழக்கு விசாரணையின் முடிவு நீதியின் பக்கம் இருக்கும் என நம்புகிறேன். கடந்த காங்கிரஸ் அரசு உணர்ச்சி மேலீட்டில் செய்த அதே தவறைத் தற்போதைய மத்திய அரசு செய்யாது என நம்புகிறேன். மாநில அரசின் உரிமைகள் மதிக்கப்படவேண்டும்.
24 ஆண்டு கால சிறைவாழ்க்கை அனுபவிப்பதைப் பற்றிச் சொல்லுங்கள்.
24 ஆண்டுகால இளமையை இழந்திருந்தாலும் நம்பிக்கை தளரவில்லை. சிறை -இழப்பையும் தந்தது.; நிறைய கற்றும் தந்தது.
ராஜீவ்காந்தி கொலை விவகாரம் மற்றும் விசாரணையின் போக்கு அரசியலாக்கப்படுகிறதா?
நிச்சயமாக! அதனால் தான் தியாகராஜன் ஐபிஎஸ் போன்ற அதிகாரிகளே நான் நிரபராதி எனக் கூறிய பின்னரும் எனக்கு விடுதலை – நீதி கிடைக்கவில்லை என்று வேதனையுடன் தெரிவித்தார்.