Home வணிகம்/தொழில் நுட்பம் ஏர் ஆசியாவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை – மாஸ் தலைவர்

ஏர் ஆசியாவுடன் இணையும் பேச்சுக்கே இடமில்லை – மாஸ் தலைவர்

558
0
SHARE
Ad

MAS CEO Christoph R Muellerகோலாலம்பூர், ஜூன் 11 – தேசிய விமான நிறுவனத்தை, ஏர் ஏசியாவுடன் ஒருங்கிணைப்பது குறித்து எந்த ஒரு முயற்சியையும் தான் எதிர்ப்பதாக மலேசியா ஏர்லைன்ஸ் (மாஸ்) தலைமை அதிகாரி கிறிஸ்டோபர் முல்லர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று நடைபெற்ற அனைத்துலக விமானநிலைய வளர்ச்சி ஆசியா மாநாடு 2015-ல் பேசிய கிறிஸ்டோபர், “நான் நேரடியாக இதை எதிர்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு நாட்டிலும் குறைந்தது இரண்டு விமான நிறுவனங்களைக் கொண்டிருக்கும் வகையில், அடுத்த 5 ஆண்டுகளில் விமானப் போக்குவரத்துத் துறையில் மாற்றங்கள் நிகழும் என்றும் முல்லர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், போட்டி என்பது அச்சப்பட வேண்டிய ஒன்று அல்ல, அது வியாபாரத்திற்கு நன்மை அளிக்கக்கூடியது என்றும் முல்லர் கூறியுள்ளார்.

கடந்த 2012-ம் ஆண்டு போட்டியைக் குறைப்பதற்காகவும், கூட்டாக செயல்படுவதற்காகவும் மாஸ் நிறுவனமும், ஏர் ஆசியா நிறுவனமும் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால் மாஸ் பணியாளர்கள் சங்கத்தின் நெருக்கடியால் அத்திட்டம் கைவிடப்பட்டது.