Home இந்தியா இந்தியக் கடலோரக் காவல் படை விமானம் கடலுக்கடியில் கண்டுபிடிப்பு!

இந்தியக் கடலோரக் காவல் படை விமானம் கடலுக்கடியில் கண்டுபிடிப்பு!

586
0
SHARE
Ad

250315_goaplaneசென்னை, ஜூன் 14 – ‘ஆப்ரேசன் ஆம்லா’ பயிற்சியின் போது காணாமல் போன இந்திய கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான சிறிய ரக விமானம் சீர்காழி அருகே கடலுக்கு அடியில் 850 மீட்டர் ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை இந்தியக் கடலோரக் காவல் படை உறுதி செய்துள்ளது.

விமானத்தை நீர்மூழ்கிக் கப்பல் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த விமானி வித்யாசாகர், துணை விமானி எம்.கே.சோனி, திசைகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகியோர் இறந்திருக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. எனினும், அதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாக வில்லை.

மேலும் விரிவான செய்திகள் தொடரும்…