Home கலை உலகம் மலையாள சினிமாவின் போக்கையே மாற்றிய மஞ்சு வாரியார்!

மலையாள சினிமாவின் போக்கையே மாற்றிய மஞ்சு வாரியார்!

575
0
SHARE
Ad

30-1406721419-manju-warrier-124-600திருவனந்தபுரம், ஜூன்15- மலையாளப் படத்தைப் பொருத்தவரையில், கதைக்கு ஏற்றபடித்தான் நாயகன் -நாயகி மாறிக் கொள்ள வேண்டும். அது மம்முட்டி, மோகன்லால் போன்ற உச்சபட்ச நட்சத்திரமாக இருந்தாலும் அப்படித்தான்.

கதாநாயகனுக்காகவும், கதாநாயகிக்காகவும் அங்கே கதை பண்ணுவதில்லை. இத்தகைய போக்கு தான் இதுநாள் வரையிலும் மலையாளத் திரைப்பட உலகில் இருந்து வந்தது.

ஆனால், மஞ்சு வாரியரின் மறு பிரவேசத்துக்குப் பிறகு இது மாறி விட்டது.

#TamilSchoolmychoice

மிகவும் திறமையான இயக்குநர் என்று பெயரெடுத்த ஆஷிக் அபு, தற்போது உருவாக்கி வரும் “ராணி பத்மினி’ என்ற படத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இது மஞ்சு வாரியரை மனதில் வைத்தே எழுதப்பட்ட கதை என்கிறார் ஆஷிக் அபு.

மஞ்சு வாரியர் மட்டும் இல்லாவிட்டால், “ராணி பத்மினி’ கதையை நான் படமாக்கத் துணிந்திருக்கவே மாட்டேன்’ என்று மஞ்சுவை வானளாவப் புகழ்கிறார் ஆஷிக் அபு.