Home இந்தியா ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் சக்கரம் வெடித்தது: 149 பயணிகள் உயிர்...

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் சக்கரம் வெடித்தது: 149 பயணிகள் உயிர் தப்பினர்!

492
0
SHARE
Ad

Air-India-1ஸ்ரீநகர், ஜூன் 15- டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தின் சக்கரம் வெடித்தது. இவ்விபத்தில் தெய்வாதீனமாக 149 பயணிகள் உயிர் தப்பினர்.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.15 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மாலை 3.45 மணியளவில் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

அப்போது திடீரென விமானத்தின் சக்கரம் பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதனால் விமானத்தில் இருந்த 149 பயணிகளும் அதிர்ச்சியில் மிரண்டனர்.

#TamilSchoolmychoice

எனினும், யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படாமல், அனைவரும் பாதுகாப்பாக விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

சக்கரம் வெடித்ததற்கான காரணம் குறித்து விசாரிக்க ஏர் இந்தியா நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.