Home இந்தியா ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியது!

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியது!

539
0
SHARE
Ad

120615_admkசென்னை, ஜூன் 15- ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் தொடங்க இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் இன்று தேர்தல் பிரச்சாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.

இங்கு அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சி.மகேந்திரன் மற்றும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, சுயேச்சைகள் உட்பட 28 பேர் போட்டியிடுகின்றனர்.

அதிமுக-வினர் தொகுதி முழுவதும் 100க்கும் மேற்பட்ட தேர்தல் பணிமனைகளை அமைத்துத் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் என்று ஒருவர் பாக்கியில்லாமல் அனைத்துத் தரப்பினரும் தொகுதியில் முகாமிட்டுத் தீவிர ஓட்டு வேட்டையில் இறங்கியுள்ளனர். அதனால் தொகுதியே ‘ஜே ஜே’- வென்றிருக்கிறது.

கம்யூனிஸ்ட் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று முன்தினம் நடந்ததைத் தொடர்ந்து நேற்று காலை 38வது வார்டு நேதாஜி நகரில் உள்ள நேதாஜி சிலையில் இருந்து, பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் சவுந்தர்ராஜன் தலைமையில், கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரசாரத்தைத் தொடங்கினர்.

சுயேச்சை வேட்பாளரான சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி, புதுவண்ணாரப்பேட்டை வஉசி நகரில் தேர்தல் பணிமனையைத் திறந்து வைத்தார். பின்னர், வஉசி நகர் மார்க்கெட் பகுதியில் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டார்.

சுயேட்சை வேட்பாளர்கள் முதற்கொண்டு அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால், ஆர்.கே. நகர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் தற்போது சூடுபிடித்துள்ளது.

.