ஜூன் 15 – முறையற்ற உணவுப்பழக்கம், உடல் பருமன் ஆகியவற்றால் பெண்களுக்கு இதயநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அவர்கள் மீன் உணவுகளை உண்பதன் மூலம் இதயநோயில் இருந்து தப்பிக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மீன்களில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது ரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. கெட்ட கொழுப்பு ரத்த நாளங்களில் படிவதை தடுக்கிறது. இதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது குறைகிறது.
இதனாலேயே இதயநோய் பாதிப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம், வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது என புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
வறுத்த மீனை சாப்பிடுவதை விட, இதர முறையில் சமைத்து சாப்பிடும் மீன் உணவே நல்ல பலனை தருகிறது. குறைவாக முறையில் சூடுபடுத்தப்பட்ட மீன் உணவு வகைகளை சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் பாதிப்பு 30 சதவீதம் குறைந்திருக்கிறது.
இத்தகைய உணவு முறையை கடைபிடிக்காதவர்களை ஒப்பிடுகையில் பொரிக்காத மீன்களை சாப்பிட்டு வந்தவர்களை நல்ல உடல்நிலையுடன் இருப்பது தெரியவந்தது.
பதப்படுத்தப்பட்டு சூடு செய்யப்பட்ட மீன் உணவுகளை சாப்பிடுவது நல்ல பலனை தரும். மீன்களை வறுத்து சாப்பிடுவதால் மீன் சத்துகள் கிடைக்காமல் போகும்.
வறுத்த மீனை சாப்பிடுவதால் இதய நோய் பாதிப்பு 48 சதவீதம் கூடுதலாகிறது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். ஆகையால் மீனை இதர முறையில் சமைத்து சாப்பிடுவது நல்லது.