Home இந்தியா சென்னை – பெங்களூரு தொடர்வண்டி தடம் புரண்டு விபத்து !

சென்னை – பெங்களூரு தொடர்வண்டி தடம் புரண்டு விபத்து !

555
0
SHARE
Ad

201506171051417035_Chennai-Express-derailed-suburban-rail-service-the-impact_SECVPF (2)சென்னை, ஜூன்17- இன்று காலை பெங்களூரில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்த அதிவேகத் தொடர்வண்டி, பேசின் பிரிட்ஜ் தொடர்வண்டி நிலையம் அருகே வந்தபோது, தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

தெய்வாதீனமாக இதில் பயணித்த பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.

12692 எண் கொண்ட சென்னை அதிவேகத் தொடர்வண்டி இன்று காலை 4.30 மணியளவில், பெங்களூருவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தது.

#TamilSchoolmychoice

அது பேசின் பிரிட்ஜ் நிலையம் அருகே வந்தபோது,ஓட்டுனர் தொடர்வண்டியின் பாதையை மாற்றினார்.

அப்போது இயந்திரப் பகுதியும், முதல் இரண்டு பெட்டிகளும் சரியாகப் பாதை மாறின. ஆனால், அதனைத் தொடர்ந்து வந்த 3 மற்றும் 4-ஆவது பெட்டிகள் எதிர்பாராத விதமாகத் தடம் புரண்டன.

இந்த விபத்தில் நல்ல வேளையாகப் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பாதுகாப்பாகத் தொடர்வண்டிப் பெட்டிகளில் இருந்து வெளியேறினர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்குத் தொடர்வண்டி நிலைய அதிகாரிகள் விரைந்து வந்தனர். மூன்று மணி நேரம் போராடித் தடம் புரண்ட தொடர்வண்டிப் பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிலை நிறுத்தினர்.

பின்னர் அது சென்ட்ரல் தொடர்வண்டி நிலையத்திற்குக் கொண்டு செல்லப் பட்டது.