Home கலை உலகம் சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ பட முன்னோட்டம் வெளியீடு!

சிவகார்த்திகேயன் நடித்த ‘ரஜினி முருகன்’ பட முன்னோட்டம் வெளியீடு!

1399
0
SHARE
Ad

rajini muruganசென்னை, ஜூன் 17 – சிவகார்த்திகேயன் நடித்த ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை இயக்கிய இயக்குநர் பொன்ராம் இயக்கிய அடுத்த படம் ‘ரஜினி முருகன்’. லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து நேற்று முன்தினம் பாடல்கள் வெளியாகின. இந்நிலையில், இதன் முதல் முன்னோட்டம் நேற்று வெளியாகியுள்ளது.

rajini muruganஇப்படத்தை உலகம் முழுவதிலும் ஈராஸ் இண்டர்நேஷனல் நிறுவனமும், தமிழகம் முழுவதும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வெளியிடும் உரிமையை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை, இப்படத்தின் முன்னோட்டத்தை 1.52 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

‘ரஜினி முருகன்’ முன்னோட்டத்தை கீழே காணலாம்: