Home உலகம் சிங்கப்பூர்: ஒலி பண்பலையின் மூத்த படைப்பாளர் பாமா பாலகிருஷ்ணன் காலமானார்!

சிங்கப்பூர்: ஒலி பண்பலையின் மூத்த படைப்பாளர் பாமா பாலகிருஷ்ணன் காலமானார்!

651
0
SHARE
Ad

bamah-balakrishnanசிங்கப்பூர், ஜூன் 17 – சிங்கப்பூர் மீடியாகார்ப் தமிழ் வானொலி நிலையமான ஒலி 96.8 பண்பலையின் மூத்த தயாரிப்பாளரான பாமா பாலகிருஷ்ணன் (வயது 60) இன்று அதிகாலை மாரடைப்பால் காலமானதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

சிங்கப்பூர் கூ தெக் புவாட் மருத்துவமனையில் அவரது உயிர் பிரிந்ததாக சிங்கப்பூரின் முக்கிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருமதி பாமா பாலகிருஷ்ணனின் இறுதிச்சடங்கு வரும் ஞாயிற்றுக்கிழமை மண்டாய் தகனச்சாலையில் நடைபெறும் என்றும் கூறப்படுகின்றது.