Home வணிகம்/தொழில் நுட்பம் அஸ்ட்ரோ 2016 நிதி அறிக்கை: வருவாய் 6% உயர்ந்து1.3 பில்லியனை எட்டியது!

அஸ்ட்ரோ 2016 நிதி அறிக்கை: வருவாய் 6% உயர்ந்து1.3 பில்லியனை எட்டியது!

726
0
SHARE
Ad

Astro

கோலாலம்பூர், ஜூன் 17 – ‘அஸ்ட்ரோ மலேசியா ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்’ நிறுவனம் எதிர்வரும் 31 ஜனவரி 2016-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான முடிவுற்ற நிதியாண்டின் நிதி அறிக்கையை இன்று வெளியிட்டது.

அதன் வருவாய் 6% வரைக்கும் உயர்ந்து 1.3 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ள நிலையில், வரிக்கு முந்தைய இலாபம் (EBITDA) 7% உயர்த்தி 472 மில்லியனும், வரிக்கு பிந்திய லாபம் (PATAMI) 31 % உயர்த்தி 168 மில்லியன் ரிங்கிட் வருவாயைப் பதிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

இன்று காலை பங்சாரில் செய்தியாளர்கள் கூட்டம் ஒன்றை நடத்திய அஸ்ட்ரோ தலைமை நிர்வாகிகள், நிதி அறிக்கையை வெளியிட்டதோடு, செய்தியாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

இக்கூட்டத்தில், அஸ்ட்ரோ தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ரோஹானா ரோசான், தலைமை செயல்பாட்டு அதிகாரி ஹென்ரி டான், அஸ்ட்ரோ வானொலி தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் அப்துல்லா, அஸ்ட்ரோ ஜிஎஸ் ஷாப் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ரோசாலிலா அப்துல் ரஹ்மான், தலைமை வர்த்தக அதிகாரி லியூ ஸ்வீ லின், தலைமை முதலீட்டு அதிகாரி ரேய்மண்ட் டான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

31 ஜனவரி 2016-ம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்கான முடிவுற்ற நிதியாண்டின் சிறப்பு முடிவுகள் பின்வருமாறு:-

வருவாய் உயர்வு 6%, 1.3 பில்லியன் ரிங்கிட்

வரிக்கு முந்தைய இலாபம் (EBITDA) 7% உயர்வு, 472 மில்லியன்

வரிக்கு பிந்திய லாபம் (PATAMI) 31 % உயர்வு, 168 மில்லியன்

பணப்புழக்கம் (FCF) உயர்வு 18%, 33 மில்லியன்

முதல் இடைக்கால இலாப ஈவு பங்குக்கு 2.75 சென் வீதம், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 22% ஆக உயர்வு.