Home கலை உலகம் விஜயின் ‘புலி’ முன்னோட்டம் வெளியீடு!

விஜயின் ‘புலி’ முன்னோட்டம் வெளியீடு!

579
0
SHARE
Ad

puli vijay,சென்னை, ஜூன் 22 – சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடித்துள்ள ‘புலி’ படத்தில் முன்னோட்டம் நேற்று வெளியாகியுள்ளது.

‘புலி’ படத்தின், முன்னோட்டம் அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்னரே, இப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், ‘புலி’ படத்தின் முன்னோட்டம் மற்றும் சுவரொட்டி, விஜய் பிறந்த நாள் அன்று, அதாவது  ஜூன் 21-ஆம் தேதி இரவு 12 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னரே விஜய் ‘புலி’ படப் புகைப்படங்கள் பற்றிப் பல செய்திகள் வெளியான வண்ணம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது, இப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுவருகிறது. இன்று வரை ‘புலி’ பட முன்னோட்டத்தை 96 இலட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘புலி’ பட முன்னோட்டத்தைக் கீழே காணலாம்: