Home உலகம் சீனாவில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பிருக்கத் தடை!

சீனாவில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பிருக்கத் தடை!

378
0
SHARE
Ad

china muslimபெய்ஜிங், ஜூன் 22 – சீனாவிலேயே முஸ்லீம்கள் அதிகமாக வாழும் சின்ஜியாங் மாகாணத்தில் ரமலான் நோன்பு மேற்கொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாகப் பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மற்றும் இணையத்தளங்களில் அறிக்கை ஒன்றை சின்ஜியாங் மாகாண நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதில் அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நோன்பு மற்றும் பிற மத நடவடிக்கைகளில் பங்கேற்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சின்ஜியாங் மாகாணத்தின் உள்ளூர் நிர்வாகம் அரசு ஊழியர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி ஏற்கனவே இஸ்லாமிய மக்களை ரமலான் நோன்பிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இஸ்லாமியர்கள் வாழும் பகுதிகளில் பிரிவினைவாதம் உருவாகக் கூடும் என்ற அச்சம் காரணமாக சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியும் சின்ஜியாங் அரசு நிர்வாகமும் மத நிகழ்ச்சிகளைத் தடை செய்வதாகக் கூறப்படுகின்றது.

கடந்த 2009-ஆம் ஆண்டில் சின்ஜியாங் மாகாணத் தலைநகரில் நடந்த மதக் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்தே ரமலான் நோன்பிருக்க முஸ்லீம்களுக்குச் சீன அரசு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.