Home இந்தியா மும்பை கடற்பகுதியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது தனியார்க் கப்பல்!  

மும்பை கடற்பகுதியில் மூழ்கிக் கொண்டிருக்கிறது தனியார்க் கப்பல்!  

464
0
SHARE
Ad

STA_6_159522gமும்பை, ஜூன் 22- ‘ஜின்டால் காமாட்சி’  என்னும் தனியார்க் கப்பல் மும்பை கடற்பகுதியில் மூழ்கிக் கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மும்பையில் இருந்து 20 மைல் நாட்டிகல் தூரத்தில் கப்பல் மூழ்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கப்பலில் சிக்கியுள்ள 20 பேரை மீட்பதற்கான பணியில் இந்தியக் கடற்படை இறங்கியிருக்கிறது.

ஹெலிகாப்டர் உதவியுடன் அங்கு மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

#TamilSchoolmychoice

kapalமீட்புப் பணிக்குக் கப்பல் ஒன்றும் அனுப்பட்டுள்ளது என்று பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணமும், உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் பற்றிய தகவலும்  உடனடியாகத் தெரிய வரவில்லை.