Home நாடு லகாட் டத்துவில் நிலநடுக்க அபாயம் – வானிலை ஆய்வுத்துறை தகவல்

லகாட் டத்துவில் நிலநடுக்க அபாயம் – வானிலை ஆய்வுத்துறை தகவல்

599
0
SHARE
Ad

Earthquake15ரணாவ், ஜூன் 22 – சபாவின் கிழக்குக் கடற்கரை மாவட்டமான லகாட் டத்து மற்றுமொரு நிலநடுக்கத்திற்கு தயாராகிவிட்டது என மலேசிய வானிலை ஆராய்ச்சித் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சி காயா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகள் அமைச்சர் டத்தோ ஈவான் எபினிடம் விளக்கமளித்த சி காயா, கடந்த 1976-ம் ஆம் ஆண்டு லகாட் டத்துவில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அதிர்வுகளின் தாக்கம் தொடர்ந்து வந்ததால் தான், கடந்த 2012-ம் ஆண்டு மூன்று நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும், அதே போன்றதொரு நிலநடுக்கத்தை எதிர்நோக்க மீண்டும் தயாராக வேண்டும் என்றும் சி காயா தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice