Home அவசியம் படிக்க வேண்டியவை ‘ஜுராசிக் வேர்ல்ட்’ படம் 13 நாட்களில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்து உலக சாதனை!

‘ஜுராசிக் வேர்ல்ட்’ படம் 13 நாட்களில் 1 பில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்து உலக சாதனை!

570
0
SHARE
Ad

jurassic worldநியூயார்க், ஜூன் 23 – ஹாலிவுட் தயாரிப்பாக வெளியாகி உலகெங்கும் வசூலை வாரிக் குவித்துவரும் ‘ஜுராசிக் வேர்ல்ட்’ திரைப்படம், வெளியான 13 நாட்களில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் சம்பாதித்து உலக சாதனை படைத்துள்ளது.

டைனோசர்களை வளர்க்கும் ‘தீம் பார்க்’ கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், வெளியான 4 நாட்களில், இதற்கு முந்தைய வசூல் சாதனை படைத்த ‘ஹாரி பாட்டர் அன்ட் தி டெத்லி ஹால்லோஸ் பாகம்-2’ படத்தின் சாதனையைத் தகர்த்தெறிந்தது.

jurassic world,தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி இந்த ஆண்டு வெளிவந்த ‘பாஸ்ட் அண்டு பியூரியஸ்’ படம் 17 நாட்களில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து உலக சாதனை படைத்திருந்தது.

#TamilSchoolmychoice

இந்தச் சாதனையை 13 நாட்களில் முறியடித்துள்ளது ‘ஜுராசிக் வேர்ல்ட்’. விரைவில் ஜப்பானில் இந்தப் படம் வெளியிடப்படவிருக்கும் நிலையில் வசூல் இன்னும் பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.