Home கலை உலகம் மெல்லிய காதலால் இரசிகர்களைக் கவர்ந்த பிரேமம்!

மெல்லிய காதலால் இரசிகர்களைக் கவர்ந்த பிரேமம்!

524
0
SHARE
Ad

Pathivayi-Njan-song-from-Premam-movie--620x300திருவனந்தபுரம், ஜூன்24- நஸ்ரியாவைத் தமிழ்த் திரையுலகிற்கு ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். நேரம் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் நிவின் பாலி.

அல்போன்ஸ் புத்திரன் மீண்டும் நிதின் பாலியைக் கதாநாயகனாக வைத்து மலையாளத்தில்’ பிரேமம்’ என்னும் படத்தை இயக்கியுள்ளார். நஸ்ரியா திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கிவிட்டதால், அவரைக் கதாநாயகியாக நடிக்க வைக்க முடியவில்லை போலும்.

அவருக்குப் பதிலாக, விஜய் தொலைக்காட்சியின் ‘உங்களில் யார் அடுத்த பிரபுதேவா?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சாய் பல்லவியை நிவின் பாலிக்கு இணையாக இந்தப் படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

#TamilSchoolmychoice

கேரளாவின் இயற்கை கொஞ்சும் அழகுடன் இனிமையான காதலைச் சொல்லியிருக்கும் இப்படத்தில் ‘அட்டகத்தி’படத்தை நினைவுபடுத்தும் வகையில் நிவின் பாலி நடித்துள்ளார்.

மழைத் தூரல் போல இரசனையான காதல். முதல் ஈர்ப்பு, தப்புத் தப்பாய்க் காதல் கடிதம், எப்படிக் காதலைச் சொல்வதென்று அறியாமல் நண்பர்களிடம் ஆலோசனை, 1980-க்கே உரிய கண்ணாம்பூச்சிக் காதல் என 80-களில் தொடங்கி 2014-ல் முடியும்படி படத்தைச் சிறப்பாகத் தொய்வில்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன்..

மென்மையான முதல் காதல், அது இல்லையென்று ஆகும்போது உலகமே இல்லாமல் போனது போன்ற சோகம். எல்லாவற்றையும் கடந்து வாழ முயலும்போது இன்னொரு முறை காதல் என எல்லோரின் வாழ்க்கையையும் அழகாகப் பிரதிபலிக்கும் திரைப்படமாகப் பிரேமம் அமைந்துள்ளது.

இப்படம் தற்போது வசூலில் சாதனை படைத்துள்ளது.