Home இந்தியா ஹெலிகாப்டர் விபத்து: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உயிர் தப்பினார்!

ஹெலிகாப்டர் விபத்து: மத்திய அமைச்சர் நிதின் கட்காரி உயிர் தப்பினார்!

566
0
SHARE
Ad

Nitin121842576ஹால்டியா, ஜூன் 24- மத்திய அமைச்சர்  நிதின் கட்காரி இன்று மேற்கு வங்க மாநிலத்திற்கு ஹெலிகாப்டரில் சென்றார். ஹால்டியாவில் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

ஹெலிகாப்டர் தரையிறங்கிய போது, ஹெலிகாப்டரின்  சுழலும் காற்றாடியிலிருந்து  கிளம்பிய சூறாவளிக் காற்றினால்,  மந்திரியை வரவேற்பதற்காக விரிக்கப்பட்டிருந்த சிவப்புக் கம்பளம் காற்றில் பறந்து விமானத்தின் சுழல்தகட்டில் சிக்கியது. உடனே ஹெலிகாப்டர்  ஆட்டம் கண்டது.

nithinஇதனால் அங்கிருந்த அனைவரும் பதற்றத்தில் கூச்சலிட்டனர்.

#TamilSchoolmychoice

ஹெலிகாப்டர் தரையைத் தொடும் நிலையில் இருந்ததால் விமானி பத்திரமாகத் தரையிறக்கினார்.

தெய்வாதீனமாகப் பெரும் விபத்து ஏதும் நடக்கவில்லை. இதனால், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நூலிழையில் உயிர் தப்பினார்.